இந்தியாவிடம் இருந்து கோவேக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு பிரேசில் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை நிரூபிக்க உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறியே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள, பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசில் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வோம் என்றும் இதற்கான காலக்கெடு குறித்து பிரேசிலுடன் ஆலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பு மருந்து 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் 81 சதவீதம் பலன் அளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.