மியன்மாரில் தந்தி இல்லா இணைய சேவையை நிறுத்துவதற்கு அந்த நாட்டு இராணுவத்தினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரிலுள்ள தொலைதொடர்பாடல் நிறுவனமான ஒரெடூ அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் கம்பிகளுடன் கூடிய இணைய சேவை மாத்திரம் வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவுறுத்தல் அண்மையில் தமது தரப்பிற்கு வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றதன் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியின்மையில், இதுவரையில் 43 சிறுவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் கொல்லப்பட்டுள்ளதாக மியன்மாரில் இயங்கும் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட சிறுவர்களில் 7 வயதான ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு கண்காணிப்பாளர்களின் தரவுகளின் அடிப்படையில், அங்கு இதுவரையில் 536 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.