ஒன்ராரியோ மாகாண முதல்வர் டக் போட் மீது அம்மாகாண அழகுக்கலை துறைசார்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
ஒன்ராரியோவில் முடக்கல் நிலை மீண்டும் அமுலாக்கப்படுத்துவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே தமது வியாபாரம் கொரோனா பரவலின் பின்னர் பெரு வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறும் அழகுக்கலை துறைசார்ந்தவர்கள் தற்போது மீண்டும் முதல்வரின் அறிவிப்பு எமக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மாகாண முதல்வர் எம்மை இலக்கு வைத்துச் செயற்படுகின்றாரோ என்ற சந்தேககங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.