கொரோனா தொற்றுக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் முன்னாள் கிரிக்கெட் வீர்ர்கள் பங்கேற்ற போட்டித் தொடர் ஒன்றில் விளையாடிய பின்னர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்டு ஆறு நாட்களின் பின்னர் அவர் மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவே தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சச்சின் தனது கீச்சகப் பதிவில் கூறியுள்ளார்.