ஒடிசாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.
இந்த ஊரடங்கு பத்து மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரவு பத்து மணிக்குள் அனைத்து கடைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாத்திரம் இரவில் நடமாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது