சத்தீஸ்கரில், நக்சல் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின் போது சி.ஆர்.பி.எப். படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஜப்பூர், சுக்மா மாவட்டங்களின் எல்லையில் உள்ள வனப் பகுதியில், சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்களை உள்ளடக்கிய பாரிய அணி ஒன்று நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.
இதன்போது, 22 இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மரணம் அடைந்தனர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன சி.ஆர்.பி.எப். படை வீரர் நக்சல்கள் பிடியில் சிக்கி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.