அனைத்து பொது சுகாதார பிரிவுகளிலும் மாகாண கொரோனா தடுப்பூசி முன்பதிவு முறையின் கீழ், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தொடக்கம் முன்பதிவு ஆரம்பமாகிறது.
சில இடங்கள் தவிர, ஏனைய பகுதிகளில் இதுவரை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே, தடுப்பூசிக்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதேவேளை, இரண்டாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில் நுழைந்துள்ள மாகாண அரசாங்கம், இந்த வாரம், தடுப்பூசிக்கான வயதெல்லையை மேலும் குறைத்துள்ளது.
குறிப்பாக, ஒன்ராறியோவில், அதிகளவு தொற்று அபாயமுள்ள பகுதிகளில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும், ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.