ரொரண்டோவில், மூன்று வாரகால சமூக மதிப்பீட்டுத் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே, பாடசாலைகளை மூடுவதற்கான முடிவை எடுத்ததாக மருத்துவர் எலைன் டி வில்லா (Eileen de Villa) தெரிவித்துள்ளார்.
தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் கவலைக்குரிய வகையில் துரிதமாகப் பரவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபடைந்த கொரோனா தொற்று அதிகளவில் பரவக் கூடியவை என்பதுடன், மிகவும் ஆபத்தானவையாகும்.
இவை வேகமாக பரவுகின்றதால், ஆபத்து அதிகமாக இருந்தது,
எனவே பாடசாலைகளை மூடும் முடிவைத் தவிர, வேறு வழியில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.