இந்தியாவில் இருந்து வரும் பயணிகள், தமது நாட்டுக்குள் நுழைவதற்கு நியூசிலாந்து அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 11ம் நாள் தொடக்கம். 28ம் நாள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை, இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் என பிரதமர் ஜெசிந்தா, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அபாயம் குறித்து ஆராயப்பட்ட பின்னர் பயணத் தடையை விலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.