கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் டெண்டுல்கர், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் ராய்ப்பூரில் நடந்த வீதிப் பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதை அடுத்து. அவரை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சச்சின் டெண்டுல்கர் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.