ஜம்மு- காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில், இன்று இரவு தொடக்கம் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவரான, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உள்ளூர் காவல்துறையினருடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாகவும், இதுவரை மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்திய படை வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.