தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவரின் அறிவுரையின் படி அவர், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை இரண்டு தடவைகளும் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.