கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகள் மீது உக்ரேன் தாக்குதலைத் தொடுத்தால், அங்குள்ள ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு உதவுவதற்காக மொஸ்கோ தலையீடு செய்யக் கூடும் என்று, ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரேனில், ரஷ்யாவின் ஆதரவுபெற்ற பிரிவினைவாதப் போராளிகளுக்கும், உக்ரேனிய அரசாங்க துருப்புக்களுக்கும் இடையில் நாட்டின் கிழக்குப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் உக்ரேனிய எல்லையில் ரஷ்யா தனது படைகளை பலப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி டிமிற்றி கோசாக் (Dmitry Kozak), ரஷ்யப் படைகள் தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தலையீடு செய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் மோதலின் அளவைப் பொறுத்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், மோதல்கள் விரிவடைந்தால், உக்ரைனின் முடிவின் தொடக்கமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.