சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இரகசிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் இந்தக் கூட்டம் இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அதனுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளில் நெருடல்கள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இரகசிய கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மே தின கொண்டாட்டங்கள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.