யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும், கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கீச்சகத்தில் இட்டுள்ள பதிவில், தமிழ் சமூகத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.