கொரோனா பற்றிய விசேட மெய்நிகர் சந்திப்பொன்று இன்று மாலை 6 மணிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்காபரோ றூஜ் பார்க் மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தலைவர் வைத்திய கலாநிதி அப்டெல் பெல்ஹஜுடன் (Abdel belhaj) ஸ்கார்பாரோ சுகாதார கட்டமைப்பு இந்த மெய்நிகர் சந்திப்பினை நடத்தவுள்ள தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கலந்து கொண்டு கொரோனா தொற்று மற்றும் தடுபூசி பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.