நாடாளவிய ரீதியில் கொரோனா தடுப்பூசிகளை விரைவாக விநியோகம் செய்வதில் எவ்விதமான தமாதங்களும் நிகழப்போவதில்லை என்று கனடிய கொரோனா தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்தின் பிரதானியான மேஜர் ஜெனரல் டனி போர்ட்டின் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், மாகாண அரசாங்கங்கள் கிடைத்துள்ள தடுப்பூசிகளை படிப்படியாக விநியோகிக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசிக்கான தட்டுப்பாடு மற்றும் தாமதம் ஆகிய காரணங்களை மையப்படுத்தி மக்களுக்கு தடுப்பூசியை விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை ‘உறைநிலைக்கு’ கொண்டு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.