10 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் மாகாணங்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று நண்பகலாகின்றபோது 7.2மில்லியன் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ச்சியாக தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொள்வனவுத்துறை அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார். ஒருசில தாமதங்கள் காணப்பட்டபோதும் அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தற்போது அனைத்துக்கனடியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி என்ற பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் கருத்திட்டம் செயல்வடிவம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்