தமிழர் தாயகத்தில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது யாழ்.மேயர் மணிவண்ணனின் கைதின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதி ஒன்ராரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
மணிவண்ணன் கைது செய்யப்பட்டு சொற்ப நேரத்தில் அவர் விடுத்த கீச்சகப்பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தக் கைதினைக் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு மணிவண்ணன் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தமிழர் தாயகத்தில் ஜனநாயகத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை இந்தக் கைது காண்பிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.