ரொறன்ரோவில், தடுப்பூசி செலுத்தப்படும் மருந்தகங்களில் பணியாற்றும் இரண்டு நகரப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் Metro Toronto Convention Centre இல் உள்ள மருந்தகத்தில் ஏப்ரல் 2 ஆம் நாள் தொடக்கம், 5ஆம் நாள் வரை பணியில் ஈடுபட்டிருந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொருவர், Scarborough Town Centre மருந்தகத்தில், மார்ச் 31 ஆம் நாள் தொடக்கம் ஏப்ரல் 2ஆம் நாள் வரை பணியில் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மைக்காகவே, இந்த சம்பவங்களை ரொறன்ரோ நகர நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ளது. இதனால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஆபத்து மிகவும் குறைவே என்றும், தொற்றுக்குள்ளானவர்கள், தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளை அணிந்து, உரிய சமூக இடைவெளியைப் பின்பற்றியிருந்தனர் என்றும் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது