திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் 12 அர்ச்சகர்களுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் பக்தர்களை அனுமதிப்பது முற்றிலும் தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தேவஸ்தான உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 4000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது 12 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.





