பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சிறிலங்கா சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாகவும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது,
குறிப்பாக, ஊதப்பட்ட பொம்மைகள், சசெட் (sachet packets) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.