கட்சித்தலைமையைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் தன்னுடைய அடையாளத்தினை மறைப்பதற்கு விரும்பவில்லை என்று கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவர் எரின் ஓ டூல் தெரிவித்துள்ளார்.
தான், கன்சர்வேட்டிக் கட்சியின் தலைமையை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட அதேநேரம், அதற்காக நீண்ட போராட்டத்தினை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கன்சர்வேட்டிக் கட்சியின் நீண்ட பயணத்தில் தனது பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தான் கட்சித்தலைமைக்கு போட்டியிட்டபோது சில முத்திரைகள் குத்தப்பட்டமையை தான் மறக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.