பழைய மொன்றியலில், (Old Montreal) ஊரடங்குச் சட்டம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக, நேற்றிரவு நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கியூபெக்கில் ஊரடங்குச் சட்டம் இரவு 9.30 மணி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாகாண முதல்வர், அதனை 8 மணிக்கு முன்நகர்த்தியுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதற்கு எதிராக பெருமளவு இளையவர்கள் ஒன்று கூடி ஒலிபெருக்கிகளில் பாடலை ஒலிபரப்பி, நடனமாடி, பட்டாசுகளை கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது.
Montreal’s Jacques Cartier சதுக்கத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள், குப்பைகளை வீதியில் போட்டு எரித்ததை அடுத்து, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்துள்ளனர்.