ஈராக்கில் கடந்த வாரம், ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு கணிசமான ஒத்துழைப்புக்களை வழங்கியதாக தி கனடியன் பிரஸ் உடனான பிரத்யேக பேட்டியில்இ மேஜர்-ஜெனரல். பீட்டர் டேவ் தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரவாத அமைப்பின் பல்வேறு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கனடிய படைகள் பெருமளவில் செயற்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக இந்த தாக்குதல்களில் கனடியப் படைகளின் பங்களிப்பு இருந்தது. மேலும்,மக்மூர் மலைகளில் இவ்வாறான தீவிரவாதிகள் மறைந்து வாழ்வதால் வான் வழித்தாக்குதல்கள் அவசியமாகின. அதற்கான தயார்ப்படுத்தல்களும் இடம்பெற்று வருகின்றது என்றார்.