இந்த ஆண்டின் இறுதிக்குள் லிபரல் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என்று என்.டி.பி.கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் கோரியுள்ளார்.
என்.டி.பி.கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், லிபரல் கட்சியினாது, தேர்தலை நடத்துவதில்லை என்று தெரிவித்துள்ளமை ஜனநாயக தவறாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், லிபரல் கட்சியினரில் தவறுகள், மற்றும் தோல்லிகள் தொடர்பாகவும் அவர் பட்டியலிட்டு, ஆட்சியில் லிபரல் கட்சியினர் இருப்பதற்கு பொருத்தமற்றவர்கள்என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் லிபரல் கட்சியினால் கொரோனாவிற்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களும் பக்கச்சார்பற்று இருந்திருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.