தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபா, எச்சில் துப்பினாலோ, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினாலோ தலா 500 ரூபா, விதிமீறும் கடைகளுக்கு 5000 ரூபா என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி முகக்கவசம் அணியாமல் சென்றதாக சென்னையை தவிர்த்து பிற நகரங்களில் நேற்று ஒரே நாளில் 89 இலட்சத்து 61 ஆயிரத்து 300 ரூபாஅபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததிற்காக 8 இலட்சத்து ,51 ஆயிரத்து ,800 ரூபா அபராதம் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக கடந்த 4 நாட்களில் 2,351 பேர் மீது வழக்கு பதிவு செய்து மாநகர போலீசார் 4 இலட்சத்து 44 ஆயிரத்து 600 அபராதம் வசூலித்துள்ளனர்.





