மஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் மஹாராஷ்டிராவில் தீவிரமடைந்து வருவதையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில மக்களுக்கு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
“நாளை இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல் செய்யப்படும்.
மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம். பேருந்து, தொடருந்து ,மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் நடைபெறும்.
அனைத்து அலுவலகங்களும் 15 நாட்களுக்கு மூடப்படும். பெட்ரோல், டீசல், பால் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமுடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
உணவகங்களில் பொதிகளை விற்க மட்டுமே அனுமதி. மக்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்“ என்றும் முதல்வர் உத்தவ் அறிவித்துள்ளார்.