யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்குமாக ஐந்து பேருக்கு நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும், முல்லைத்தீவு மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அச்சுவேலி பிரதேச மருத்துவமனையின் மருத்துவர், தாதி, ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்பட்டுள்ளனர்