பொது நிதியில் இயங்கும், ஒன்ராறியோவில் உள்ள Laurentian பல்கலைக்கழகம் 60 கல்வியியல் திட்டங்களை நிறுத்த முடிவு செய்துள்ளது,
குறைந்தளவு மாணவர்கள் சேர்க்கை இடம்பெறுகின்ற கற்கை நெறிகளே இடைநிறுத்தப்படுவதாக Laurentian பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 58 பட்டப்படிப்புகள் நிறுத்தப்படுவதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 34 பாடநெறிகள் ஆங்கில மொழியிலும், 24 பாடநெறிகள் பிரெஞ்சு மொழியிலும் இடம்பெற்று வந்தவை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 80 இற்கும் அதிகமான கல்விப் புலத்தினர் தமது வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ஒன்ராறியோ பல்கலைக்கழக பீட சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது