ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கடந்த வாரம் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட புலனாய்வுப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும, இந்த உத்தியோகத்தர் காவல்துறை சீருடையில் இருந்தபோதே பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முனைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.