விமானம் மூலம் கனடாவுக்குள் நுழையும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக 1,000 டொலருக்கும் அதிகமான பணத்தை செலுத்துவதைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தனிமைப்படுத்தலுக்கான செலவு முழுவதையும், மத்திய அரசு செலுத்தவுள்ளதாக குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் உள்ள 19 விடுதிகளில், மூன்று நாள் தங்குமிட பொதியை கொள்வனவு செய்ய முடியாது என்று சுகாதா அதிகாரிகளுக்கு கூற வேண்டும்.
இதன் மூலம், ரொறன்ரோ விமான நிலையப் பகுதியில் உள்ள விடுதியில், இலவச தங்குமிட வசதியைப் பெற முடியும் என்றும் குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த திட்டம் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது