தற்போதைய நிலை நீடித்தால், ரொறன்ரோவில் ஏப்ரல் மாத இறுதியில், நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ தொடக் கூடும் என்று, ரொறன்ரோ நகரின் உயர்நிலை மருத்துவர் எலீன் டி வில்லா (Eileen de Villa) தெரிவித்துள்ளார்.
தொற்றின் மூன்றாவது அலை, நகரில் அழிவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போக்கு மிக மோசமானதாக இருக்கும் என்றும், முன்னரை விட நிலைமை நெருக்கடியானதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர் எலீன் டி வில்லா குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதத்தில் தற்போதுள்ளதைப் போன்ற பரவல் நிலை காணப்படுமானால், ஜூன் மாதத்தில், தொற்று நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்தை தொடும் ஆபத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்