சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத
சிறிலங்காவில் 11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை தடை செய்யும், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 27 ஆவது பிரிவின் கீழ், இந்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, சட்ட விரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஏப்ரல் 13ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ், அல்குவெய்டா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சிறிலங்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் இந்த தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.





