ஒன்ராரியோவின் அனைத்துப் பாடசாலைகளும் தொலைநிலைக் கல்வி முறைமைக்குச் செல்வதாக முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 19ஆம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்ப, இடைநிலை பாடசாலை மாணவர்களுக்கான தொலைநிலைக் கல்வி முறைமை தாமதமின்றி ஆரம்பிக்கப்படவுள்ளது. அதேபோன்று மீண்டும் பாடசாலைகளை செயற்படுத்தி ஆபத்துக்களை விளைவிக்க நான் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்