ரொரண்டோவில் இயங்கிய இரு சமுதாய தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தமாதமான நிலைமைகளால் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மூடப்பட்ட இரு சமுதாய தடுப்பூசி மையங்கள் இரண்டையும் எதிர்வரும் 26ஆம் திகதி மீள திறப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் ஒன்ராரியோ முழுவதும் மேலதிக தடுப்பூசி மையங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.