கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி பயன்பாட்டை டென்மார்க் நிரந்தரமாக கைவிட்டுள்ளது.
குறித்த ஊசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் பலருக்கு தீவிர இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக டென்மார்க் சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய ஒளடத கண்காணிப்பு குழுவும் பரிந்துரைத்துள்ளது.