ரொறன்ரோவில் ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவர், இளம்பெண் ஆடை மாற்றும் அறையில், இலத்திரனியல் கருவியைப் பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய பெண் ஒருவர், ஒளிப்படப் பிடிப்பாளரை படப்பிடிப்புக்காக தொடர்பு கொண்ட போது, தனது வீட்டின் கீழ்த் தளத்துக்கு வருமாறு அவர் அழைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்த பின்னர், உடைகளை மாற்றிக் கொள்வதற்காக இளம்பெண் அறைக்குச் சென்ற போது அங்கு இலத்திரனியல் பதிவு கருவி இயங்கு நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார்.
இதுகுறித்து குறித்த பெண் செய்த முறைப்பாட்டை அடுத்து காவல்துறையினரால் ஒளிப்படப்பிடிப்பாளரின் இல்லத்தில் இருந்து இலத்திரனியல் பதிவுக் கருவி, கணினி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய ஒளிப்படப்பிடிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.