ஒன்ராறியோவில் 4 ஆயிரத்து 156 தொற்றாளர்கள் நேற்று ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும், 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 7 நாட்களில் சராசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 4 ஆயிரத்தை எட்டியுள்ளது.
ஏழு நாட்களுக்கு முன்னதாக, இந்த சராசரி தொற்று அளவு, 2 ஆயிரத்து 553 ஆக இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஆயிரத்து 456 தொற்றாளர்களும், திங்கட்கிழமை 4 ஆயிரத்து 401 தொற்றாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது