ஆபிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மோசமான தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வைக்கோலால் வேயப்பட்டிருந்த குடிசைகளில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத வகையில் தீ பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
குறுகிய நேரத்துக்குள் கொளுந்துவிட்டு எரிந்த தீயினால் ஆரம்ப பாடசாலை முழுவதும் தீக்கிரையாகியுள்ளது.
தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.