ஒன்ராரியோவில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தங்கியிருக்கும் முடக்க நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் டக்போர்ட் தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி வரையில் இந்த நிலைமை தொடரலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் மாகாணத்திற்குள் பயணங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட அவசர நிலைமை ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அத்தியாவசிய தேவைகள் அற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்படும் அதேவேளை, பாரிய வர்த்தக நிலையங்கள் 25சதவீதமான செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், திறந்தவெளி விளையாட்டு பிரதேசங்கள், நீச்சல் தடாகங்கள், உள்ளிட்ட அனைத்து ஒன்று கூடும் பகுதிகளும் நாளை முதல் மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.