ஒன்ராரியோவில் போக்குவரத்து மட்டுப்பாடுகளை பேணுவதற்காக மாகாண காவல்துறையினரிடத்தில் தற்காலிகமாக அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் (Sylvia Jones) தெரிவித்துள்ளார்.
ஒன்ராரியோவில் தேவையற்றபயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அதனை அமுலாக்குவதற்கான அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மக்கள் பொதுவெளியில் நடமாடுவது குறைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.