கொரோனா தொற்று பரவல் இருந்தாலும், தற்போதைய நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் சூழ்நிலையே காணப்படுகிறது என ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.
இன்னும் மூன்று மாதங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால், ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர், அப்போதைய சூழலைப் பொறுத்தே இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று ஜப்பானிய அரசும் ஒலிம்பிக் குழுவும் தெரிவித்துள்ளன. அதேவேளை, ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் ஜோதியை பிரபலங்கள் ஏந்தி ஓட திட்டமிடப்பட்டிருந்த போதும் அது குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது