அல்பேர்ட்டா மருத்துவ உத்தியோகத்தர்களை ஒன்ராரியோவிற்கு அனுப்பபோவதில்லை என்று மாகாண முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார்.
ஒன்ராரியோவில் மருத்துவ உத்தியோகத்தர்களின் தேவைப்பாடு அதிகமாக இருந்தமையினால் அல்பேர்ட்டாவிடத்தில் முதல்வர் போர்ட் அரசாங்கம் குறிப்பட்ட தொகையான மருத்துவ உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்குமாறு கடிதம் மூலம் கோரியிருந்தது.
குறிப்பாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை போக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், அதனை அல்பேர்ட்டா முதல்வர் நிராகரித்துள்ளார்.