ஒன்ராறியோவில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செவ்வாய்க்கிழமை தொடக்கம், மருந்தகங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் என்று மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கிறிஸ்ரின் எலியட்டின் (Christine Elliott) பேச்சாளர் நேற்று மாலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே, அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி வழக்கப்பட்டு வருகிறது.
தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த வயது வரம்பு 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
குருதி உறைதல் தொடர்பான இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதும், இந்த தடுப்பூசியின் பாதகத் தன்மையை விட சாதகத்தன்மைகள் அதிகம் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.