கியூபாவில் ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர், காஸ்ட்ரோ குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கியூபாவில் பிடெல் காஸ்ட்ரோவுக்குப் பின்னர் அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ நாட்டின் தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், பதவி வகித்து வந்தார்.
1959-க்கு பின்னர் காஸ்ட்ரோ சகோதரர்களே நாட்டை ஆட்சி செய்து வந்த நிலையில், 2018-ஆம் ராவுல் காஸ்ட்ரோ நாட்டின் தலைவர் பதவியில் இருந்து விலகி கட்சிப் பதவியில் மட்டும் நீடித்து வந்தார்.
இந்த நிலையில் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் தொடக்கத்தில், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) அறிவித்திருந்தார். அவர் கட்சிப் பதவியைத் துறந்துள்ளதை அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவிக்கு நாட்டின் ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கனெல் (Miguel Díaz-Canel) தேர்வு செய்யப்பட்டுள்ளார்