கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்படி நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்போது அனைத்து அலுவலங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவை இரவு 8 மணி வரை மாத்திரமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்து கடைகள் உள்ளிட்டவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது