கனடாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலையின் தாக்கம் கணிசமாகி உள்ள நிலையில் போக்குவரத்து மட்டுப்பாடுகள் தொடர்பில் சமஷ்டி அரசாங்கம் கரிசனை செலுத்தியுள்ளது.
குறிப்பாக, கனடாவிற்குள் வருகை தருவர்கள் மற்றும் வெளியேறிச் செல்பவர்கள் பற்றிய கூடுதல் மட்டுப்பாடுகளை அமுலாக்குவது தொடர்பில் சமஷ்டி அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோஇ துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்இ கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ டூல் மற்றும் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் உள்ளிட்ட பல மாகாணங்களின் முதல்வர்கள் தடுப்பூசிக்கான வயதெல்லயை குறைப்பதற்கு கூட்டாக இணக்கம் தெரிவித்தமை மிக முக்கியமான விடயமென்றும் சமஷ்டி அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது வரையில் 9.5மில்லியன் பேருக்கு கொரேனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது மருந்தளவு விரைவில் வழங்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாக்கப்பட்டுள்ளதாகவும் சமஷ்டி அரசாங்கம் மேலும் தெரிவித்தது.