சர்வதேச வானூர்தி மூலம் ரொறன்ரோவுக்கு வந்த Whitby வாசி ஒருவர், போலியான கொரோனா சான்றிதழைக் கொண்டு வந்தமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் போலி கொரோனா சான்றிதழுடன், ரொறன்ரோ பியார்சன் வானூர்தி நிலையத்துக்கு வந்த குறித்த பயணி தொடர்பாக கனடா எல்லைப் சேவை முகவரக அதிகாரிகள் பீல் பிராந்திய காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த பயணி பொது சுகாதார முகவர் அமைப்பு அதிகாரியின் முன் நிறுத்தப்பட்டு, அவரது ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்ட போது, கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை சான்றிதழ் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 57 வயதுடைய குறித்த பயணி போலி சான்றிதழை சமர்ப்பித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.