புதையலில் கிடைத்த பழங்கால நாணயக் குற்றிகள் எனக் கூறி, நாணயங்களை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் ஒருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கைது செய்யப்பட்ட 23 வயதுடைய இளைஞனிடம் இருந்து பழங்கால நாணயங்கள் என கூறப்படும் 257 நாணய குற்றிகளையும், காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன், பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
நேற்று மாலை மன்னாரில் இந்த புதையல் கிடைத்ததாக கூறி குறித்த இளைஞன் அதனை விற்பனை செய்ய முயன்றுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.